மஹேலவுக்கு புதிய பொறுப்பு!! -தேசிய கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமனம்-
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், பல சாதணைகளுக்குச் சொந்தக்காருமான மஹேல ஜெயவர்தன 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு தேசிய கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹேல ஜெயவர்த்தனவின் புதிய நியமனத்தின் கீழ், அவர் தேசிய ஆண்கள் அணியைத் தவிர அனைத்து தேசிய அணிகளின் கிரிக்கெட் பிரிவின் பொறுப்பாளராக செயற்படுவார்.
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் அவருக்கு குறித்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.