மோடியின் ருவிட்டர் சமூக வலைதளத்தில் ஊடுருவல்!! -சர்சை பதிவுகளும் இடப்பட்டது-
இந்திய பிரதமர் மோடியின் ருவிட்டர் சமூக வலைத்தள பக்கத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊடுருவிய விசமிகள் பிட்கொய்ன் எனப்படும் இணைய வழி பணப் பரிமாற்ற முறைமை அந்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் ருவிட்டர் பக்கத்தை பல மில்லின் பேர் பின்தொடரும் நிலையில் இந்தப் பதிவால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ருவிட்டர் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு பிரதமர் மோடியின் ருவிட்டர் கணக்கு மீட்க்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ருவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹாக் செய்யப்பட்டது. பிட்கொயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக இணைய ஊடுருவிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த கணக்கு ஹாக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.