9,800 கோடி செலவில் சரயு தேசிய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம்!! -பிரதமர் மோடி திறந்து வைத்தார்-
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூரில் 9,800 கோடி இந்திய ரூபா செலவில், சரயு தேசிய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
14 இலட்சம் ஹெக்டேயர் நிலங்கள் குறித்த திட்டம்மூலம் நீர்ப்பாசன வசதி பெற முடியும் என்பதுடன் 6,200 கிராமங்களை சேர்ந்த 29 இலட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1978 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 40 வருடங்களாக குறித்த திட்டத்தை முழுமையடையச் செய்ய முடியாமல் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.