SuperTopAds

பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட 35 ஆயிரம் கண்கள் யாருடையது? எப்படி அனுப்பினீர்கள்? தெளிவுபடுத்து அரசிடம் பகிரங்க கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட 35 ஆயிரம் கண்கள் யாருடையது? எப்படி அனுப்பினீர்கள்? தெளிவுபடுத்து அரசிடம் பகிரங்க கோரிக்கை..

பாகிஸ்த்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு அனுப்பபட்டது என்பதை தெளிவுபடுத்தவேண்டும். என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இப் போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கண்டன பேரணியில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மகஜர் கையளித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்து தெரிவிக்கையில், கடந்த 13 வருடங்களாக இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றோம். 

பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருந்து நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். எனினும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை .தற்போதைய ஆட்சியில் கூட பெண்களாகிய எங்களுக்கு விடுதலை இல்லை சுதந்திரமில்லை. 

இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து 13 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை. 

பெண்களாகிய எங்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு கிடைக்கின்றதோ அன்றுதான் எமக்கு சுதந்திரம். 

மேலும் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது. ஐ.நா எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 11 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

போராட்ட காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்தவர்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள் தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் 

தங்களோடு வந்து சேரவேண்டுமென்று போராடுபவர்கள் என சுட்டிக்காட்டினார். குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன் பொது போக்குவரத்தினையும் சீர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.