SuperTopAds

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்!

ஆசிரியர் - Editor I
ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்!

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இந்திய மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். 

இந்தியா - இலங்கை இருநாடுகளினதும் மக்களுக்கு இடையே உள்ள நல்லெண்ணத்தையும் நட்புறவையும் பிரதிபலிக்கும் வகையிலான 

மனிதாபிமான சமிக்ஞையாக ஆபத்தில் சிக்கியிருந்த இலங்கை மீனவர்களையும் அவர்களது படகையும் இந்திய மீன்பிடிக் படகு மீட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

IMUL-A-0039-TLE என்ற பதிவு எண்ணைக் கொண்ட Lulu-01 இலங்கை மீன்பிடிக் படகு கடந்த 2 ஆம் திகதி ஆழ்கடலில் பாரிய ஆபத்தை எதிர்கொண்டிருந்த்தது. சென்னைக்கு வடக்கே 24 கடல் மைல் தொலைவிலிருந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இதனை அவதானித்துள்ளது.

இலங்கைக் படகினதும் அதிலிருந்தவர்களினதும் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டு, அதனை காட்டுப்பள்ளியிலுள்ள அதானி துறைமுகத்துக்கு வெற்றிகரமாக இழுத்துச் சென்றது. 

இலங்கை படகிலிருந்த நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.