80 சதவீத தீக்காயங்களுடன் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன்!! -காப்பாற்ற தீவிர சிகிச்சை-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த குன்னூர் உலங்கு வானூர்தி விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த கேப்டனை காப்பாற்ற தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்தில் அவர்களுடன் பயணித்த வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் குன்னூர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் வரும் பட்சத்தில் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவையில் இருந்து சென்ற சிறப்பு மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.