SuperTopAds

நெப்போலியனின் போர்வாள் 21 கோடி ரூபாய்க்கு ஏலம்!!

ஆசிரியர் - Editor II
நெப்போலியனின் போர்வாள் 21 கோடி ரூபாய்க்கு ஏலம்!!

மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வாள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற இராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியிருந்தார். 1799 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பிரெஞ்ச் கடற்கரையில் இருந்து ஆங்கிலேய கப்பல்கள் வெளியேறிய போது, நெப்போலியன் தனது படைகளுடன் முன்னேறிச் சென்று ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தினார். 

அப்போது அவர் எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்கா நாட்டில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.