பிரான்ஸில் திடீரென மாயமான பெற்றோர்!! -தனிமையில் தவிக்கும் 13 வயது மகள்-

பிரான்ஸ் நாட்டின் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் பெற்றோர் திடீரென காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோர் கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் 13 வயதுடைய மகள் அவர்களை தேடி அலைந்து வருகிறார். நவம்பர் மாத இறுதியில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் தாய் மற்றும் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட சிறிய தகராறின் பின்னர் 51 வயதான அந்த மகளின் தந்தை, வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் திகதி 36 வயதுடைய தாய் திடீரென காணாமல் போயுள்ளார். அவர்கள் காணாமல் போனதில் இருந்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, அந்நாட்டில் வருடத்திற்கு 40 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது.