SuperTopAds

உருக்குலைந்த நிலையில் மீனவரின் சடலம் 19 நாட்களின் பின்னர் மீட்பு

ஆசிரியர் - Editor III
உருக்குலைந்த நிலையில் மீனவரின் சடலம் 19 நாட்களின் பின்னர் மீட்பு

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் கரை ஒதுங்கிய  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ்  பிரிவில்  இன்று (8) காலை குறித்த  சடலம் கரையொதுங்கியதுடன் அடையாளம் காணப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன்  சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை  பகுதிக்கு  பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது..

 

இதனை அடுத்து வெளியாகிய செய்தியை அடிப்படையாக  கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மீனவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த சடலமாக மீட்கப்பட்ட மீனவர் கடந்த 23.11.2021 அன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முகத்துவாரத்திலிருந்து   மாலை கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு மாத்திரம் கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில்  மறுநாள் 24.11.2021 புதன்கிழமை அன்று மீனவர்களினால்  காலை மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு காணாமல் சென்றவர்  மட்டக்களப்பு  மாவட்டம் திராய்மடுஇசுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த எஸ்.சுரேஸ்குமார்(வயது-43)  என்ற மீனவர் ஆவார்.எனினும் இவ்வாறு காணாமல் சென்றவர் தொடர்பாக அவரது உறவினர்களினால் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் 19 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மருதமுனை பகுதி கடற்கரையில் காணாமல் சென்ற குறித்த மீனவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் குடும்பம் மிகவும் வறுமையானது எனவும் குறித்த நபர் மீன்பிடித்துவந்தால் தான் வீட்டில் உணவு சமைக்கப்படும் நிலையுள்ளதாகவும் 5 பிள்ளைகளின் தந்தை எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.