உணவில் போதை மருந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! -பாடசாலை அதிபர் கைது-
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு உணவில் போதை மருந்துகலந்து கொடுத்து பாலியல்கொடுமை செய்ததாக பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு உ.பி.யின்முசாபர்நகர், புர்காஜி பகுதியில் சூர்யதேவ் என்ற பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் 29 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்நிலையில் இதற்கு முதல்நாள் வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பாடசாலையில் நள்ளிரவு வரை படிக்கவேண்டும் என்று கூறி அங்கு தங்க வைத்துள்ளனர்.
இதையடுத்து இரவு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மயக்க நிலையில் இருந்த 17 மாணவிகள் தங்கள் வீட்டுக்கு திரும்பியபின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.