SuperTopAds

வலியே இல்லாமல் கருணைக் கொலை!! -புதிய இயந்திரத்திற்கு அனுமதி வழ்ஙகிய சுவிட்சர்லாந்து-

ஆசிரியர் - Editor II
வலியே இல்லாமல் கருணைக் கொலை!! -புதிய இயந்திரத்திற்கு அனுமதி வழ்ஙகிய சுவிட்சர்லாந்து-

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்காக நவீன இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தைப் பயன்படுத்தவும் அந்நாட்டு அரசாங்கமும் அனுமதி கொடுத்துள்ளது. 

அந்நாட்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து நாட்டின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ‘டொக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் வைத்தியருமான பிலிப் நிட்ச்கே என்பவர் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்கான இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.