ஒரே நாளில் 101 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!! -இங்கிலாந்தில் அதிகரிக்கும் ஆபத்து-

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேருக்கு ஒமிக்ரோன் புதிய கொரோனா திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டில் குறித்த ஒமிக்ரோன் திரிபு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது.
இதனைவிட இங்கிலாந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது. இத்துடன் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.