பொது மக்கள் மீது துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படையினர்!! -13 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
பொது மக்கள் மீது துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படையினர்!! -13 பேர் பலி-

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்திலுள்ள  நாகாலாந்தில் சனிக்கிழமை மாலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் போது நிலக்கரி சுரங்கத்தில் பணியை முடித்து விட்டு திரும்பிய தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் உள்ளூர் மக்கள் 5 பேரும், படை வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டதாகவும், அங்கு நிகழ்ந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு