இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!! -13 பேர் பலி-

இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை நேற்று சனிக்கிழமை திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதனால் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை சாம்பல் மற்றும் கரும் புகை சூழ்ந்தமையினால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
எரிமலை வெடிப்பினால் சுமார் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தகவல்களை மேற்கொள்ளிட்டு அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3,676 மீற்றர் உயரம் (12,060 அடி உயரம்) கொண்ட செமேரு இந்தோனேசியாவில் அடிக்கடி குமுறும் எரிமலையாகவும் ஜாவா தீவில் உள்ள மிக உயரமான மலையாகவும் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து செமரு பலமுறை வெடித்துள்மை குறிப்பிடத்தக்கது.