இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று: 477 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரே நாளில் 9,765 பேருக்கு தொற்று: 477 பேர் பலி-

இந்தியாவில் ஒரே நாளில் 477 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நேற்று முன்தினம் தொற்று தினசரி பாதிப்பு 551 நாளில் இல்லாதவகையில் 6,990 ஆக பதிவானது. ஆனால் நேற்று இந்த பாதிப்பு 28.1 சதவீதம் அதிகரித்து 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை  புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 477 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,69,724 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Radio