ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை!! -இந்தியா சுகாதார அமைச்சு தகவல்-

ஆசிரியர் - Editor II
ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை!! -இந்தியா சுகாதார அமைச்சு தகவல்-

புதிய திரிபு ஒமிக்ரொன் வைரஸ் தொற்றுதியான ஒருவரும் இந்தியாவில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென ந்நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுச் மண்டவியா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பல் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சந்தேகத்திற்கிடமான புதிய தொற்றுகள் குறித்து சுகாதார தரப்பினர் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வளங்களும், ஆய்வகங்களும் அதிகளவில் உள்ளன. எந்த சூழ்நிலையையும் தம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும் என்றார்.


Radio