உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினம் தொடர்பில் கல்முனையில் விழிப்புணர்வு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாராந்த ஒன்றுகூடலில் உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினமான இன்று அது தொடர்பான விழிப்புணர்வு இன்று(1) நடைபெற்றது.
இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுனணன் தலைமை தாங்கியதுடன் இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய பகுதி தலைவர்கள் மற்றும் பிராந்திய சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.