சுற்றுலா வந்த பாரிஸில் கோடிஸ்வர பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்!! -இந்திய இளைஞனுக்கு அடித்த அதிஸ்டம்-

ஆசிரியர் - Editor II
சுற்றுலா வந்த பாரிஸில் கோடிஸ்வர பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்!! -இந்திய இளைஞனுக்கு அடித்த அதிஸ்டம்-

பாரிஸில் வசித்துவரும் மேரி லோரி ஹெரால் என்ற இளம் கோடீஸ்வர பெண் தொழிலதிபர், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரான்ஸ் பெண்ணும் இந்திய இளைஞரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற அந்த கோடீஸ்வர பெண் பீகார் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்து இளைஞன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ராகேஷ் என்ற இந்திய இளைஞர் அவரது பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார்.

இதன் பின் இருவரும் கையடக்க தொலைபேசி மூலம் காதல் உறவை தொடர்ந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷை பாரிஸ் அழைத்து சென்ற மேரி அங்கு அவருக்கு ஆடை விற்பனை செய்யும் தொழில் வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அதிகம் நேசித்த மேரி இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த தம்பதி பீகாருக்கு வந்தனர். அங்கு இரு வீட்டார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராகேஷ் - மேரி திருமணம் நடைபெற்றுள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்களும் திரளாக வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Radio