அறநெறிப் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிப்பு
திருமகள் அறநெறிப் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28) மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷானந் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பாடசாலை கட்டடத்தை திறந்து வைத்தனர்.
குறித்த பாடசாலை கட்டடமானது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு கிராமத்தில் அமைந்திருப்பதுடன் இவ் அறநெறிப் பாடசாலையானது அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களுடைய பூரண நிதிப் பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகத்தினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.