ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் பரவல்!! -எல்லைகளை மூடுகிறது ஜப்பான்-

புதிய ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் பரவலை அடுத்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், அனைத்து வெளிநாட்டினருக்கும் அதன் எல்லைகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடவுள்ளது.
ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஜப்பான் தனது எல்லைகளை மூடும் என்று பிரதமர் புமியோ கிஷிடா இன்று தெரிவித்தார்.
அந்நாட்டில் இதுவரை புதிய ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் தொற்று நோயாளர்கள் எவரும் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைகளை மூட தீர்மானித்துள்ளதாக பிரதமர் புமியோ கிஷிடா குறிப்பிட்டார்.