SuperTopAds

லண்டன் - ஒக்ஸ்போர்ட்டில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
லண்டன் - ஒக்ஸ்போர்ட்டில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்..

லண்டன் - ஒக்ஸ்போட்டில் தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. 

மாவீரர் துயிலும் இல்லங்களை ஒத்ததாக கல்லறைகள் அமைக்கப்பட்டு ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. 

மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இன்று (27) மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

மாவீரர்களின் பெற்றோர், மாவீரர்களின் துணைவியர், பிள்ளைகள், மாவீரர் குடும்ப உறவுகள், நண்பர்கள், பொதமக்கள் என ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்

மாவீரர்களுக்கான ஈகை சுடர்களை ஏற்றி கண்ணீர்மல்க ஈகையர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.