10 பேர் உயிரிழப்புக்கு காரணமான படகு விபத்து! அனுமதியளித்த நகர முதல்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்..

ஆசிரியர் - Editor I
10 பேர் உயிரிழப்புக்கு காரணமான படகு விபத்து! அனுமதியளித்த நகர முதல்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்..

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தையடுத்து படகுப்பாதைக்கு அனுமதியளித்த நகரசபை தவிசாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கிண்ணியா பொலிஸாரால் இன்று காலை நகரபிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தலைவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை பலி கொண்ட 

கிண்ணியா படகுப்பாதை விபத்து தொடர்பில் நேற்று (24) கைது செய்யப்பட்ட தனியார் படகுப் பாதை உரிமையாளர் மற்றும் இரு நடத்துநர்கள் 

எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு