மகா விஷ்ணு பக்தனாக மாறி 1000 நாமங்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ள தென்னாபிரிக்க நாட்டவர். பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

ஆசிரியர் - Editor II
மகா விஷ்ணு பக்தனாக மாறி 1000 நாமங்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ள தென்னாபிரிக்க நாட்டவர். பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்காவை சேர்ந்தவரான பண்டிட் லுாசி சிகபவன் என்பவர் இந்து சமய கடவுளான மகா விஷ்ணு தொடர்பாக எழுதிய புத்தகம் பெரும் வரவேற்றை பெற்றிருக்கின்றது. 

இந்நூல் இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரிடையேயும் பிரபலமடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா மக்களுக்கும், குறிப்பாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தைப் படிக்கத் தெரியாத இந்து இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில், 

விஷ்ணுவின் 1,000 நாமங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.பண்டிட் லூசி சிகாபன் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு விஷ்ணு - 1,000 நாமங்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

ஏழு வருடங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்த அவர், பிறகு தனது எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். 

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிக்பன், 2005ல் எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்தேன்.

கடனை கட்ட முடியாததால் எனது காரை வங்கி திரும்ப வாங்கிக் கொண்டது. என் மகன்கள் நிதாய் மற்றும் கவுரா குழந்தைகளாக இருந்த நிலையில் அவர்களை வளர்க்கவும் நாம் பெரும் பாடு பட்டேன். 

அது மிகவும் கடுமையான காலகட்டம். ‘கடினமான காலங்களில் ஒருவர் நம்பிக்கை இழக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். 

கடவுளை நம்புபவர்கள் வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருந்தது. 

நானும் அவ்வாறே செய்தேன். சத்யநாராயண விரதம் இருந்தால், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என நம்பினேன் என சிக்பென் கூறுகிறார். 

இந்தியாவில் பயிற்சி பெற்ற சிக்பன், ஜோகன்னஸ்பர்க் பிராந்தியத்தில் உள்ள இந்து சமூகத்திற்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக-பொருளாதார குழுக்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். 

பல்வேறு பூஜைகள் முதல் இந்து சடங்குகள், திருமணங்கள் என்பதோடு இறுதிச் சடங்குகளையும் செய்து வைக்கிறார்.

Radio