தலிபான்களிடம் சரணடைந்த 100 இற்கும் அதிகமான ஜ.எஸ் அமைப்பினர்!!

ஆசிரியர் - Editor II
தலிபான்களிடம் சரணடைந்த 100 இற்கும் அதிகமான ஜ.எஸ் அமைப்பினர்!!

தலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அவ்வப்போது சில தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அதற்கு எதிர்த் தாக்குதலை தலிபான்கள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜலதாபாத் நகரத்தில் 100 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள், அதிகரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


Radio