காலி மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி!!

ஆசிரியர் - Editor II
காலி மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி!!

காலி மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பார்வையிட 50 வீதமான ரசிகர்கள்  அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் 4 ஆவது நாளான இன்று புதன்கிழமை முதல் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும் தற்போதைய தடுப்பூசி நெறிமுறைகளின்படி, கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.


Radio