110 நாடுகளை அழைத்த பைடன்!! -சீனா, தாய்வான் நிராகரிப்பு-

ஆசிரியர் - Editor II
110 நாடுகளை அழைத்த பைடன்!! -சீனா, தாய்வான் நிராகரிப்பு-

அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். இருப்பினும்  அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் என்பவை அழைக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பாரம்பரிய அரபு நட்பு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்தான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை அழைக்கப்படவில்லை.பிரேசிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Radio