பாடசாலை மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து..! 6 பேர் உயிரிழப்பு, பலரை காணவில்லை, இலங்கையை உலுக்கிய கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து..! 6 பேர் உயிரிழப்பு, பலரை காணவில்லை, இலங்கையை உலுக்கிய கோர விபத்து..

திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல்போயுள்ளனர். 

கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம் இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, 

கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் இன்று (23.11.2021) காலை இடம் பெற்றுள்ளது.பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

நோயாளர் காவு வண்டியின் மூலமாக 11 பேர் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்கள்.இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். 

அவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு