எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்த ஷஹீன் அப்ரிடி!!

ஆசிரியர் - Editor II
எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்த ஷஹீன் அப்ரிடி!!

பங்காளதேஷ் அணி துடுப்பாட்ட வீரரின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்காளதே{க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் ரி-20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹபிப் ஹ_சைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்தியமைக்காக, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முதல் பந்தில் ஹபிப் சிக்ஸர் ஒன்றை விளாசியிருந்தார். அதனையடுத்து, இதனால் கோபமடைந்த அப்ரிடி பந்தை அவர் மீது எறிந்து கோபத்தை வெளிப்படுத்தி இவ்வாறு சிக்கியுள்ளார்.


Radio