எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்திரேலியா!! -அறிவித்தார் பிரதமர் ஸ்கொட் மோரிசன்-
அவுஸ்திரேலியாவில் கொரோனா நெருக்கடி காரணமாக விதித்திருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் அகதிகள், சர்வதேச மாணவர்கள், தொழில்வான்மையாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்காக எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மோரிசன் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு அந்நாட்டின் விசா வைத்திருப்பவர்கள்a முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், அந்நாட்டின் அரசிடமிருந்து முன்னனுமதி பெறாமலேயே அவுஸ்திரேலியா பயணம் செய்ய முடியும்.
இவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அந்தந்த மாநிலங்களின் சட்டங்களுக்கேற்ப அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் ஸ்கொட் மோரிசன் கூறினார்.
அரசின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா விசா வைத்திருக்கும் சுமார் 2 இலட்சம் பேர் டிசம்பர் முதல் அந்நாட்டிற்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.