ஆப்கான் மக்களுக்கு 1,000 nhடன் நிவாரணப் பொருட்கள்!! -12 ரயில்களில் அனுப்பிய சீனா-
சீன அரசாங்கம் 1000 டொன் நிவாரணப் பொருட்களை ரயில் மூலம் ஆப்கானுக்கு அனுப்பி வைத்துள்ளது. 20 வருட போர் மேகம் சூழ்ந்திருந்த ஆப்கானில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இப்போது குளிர் காலம் நெருங்குவதால், அங்குள்ள மக்களுக்கு உதவும் நோக்கில், குளிர் கால ஆடைகள், காலணிகள், போர்வைகள், ரொட்டிகள், பால் பவுடர் என 1000 டொன் நிவாரணப் பொருட்களை ரயில் மூலம் ஆப்கானுக்கு சீனா அனுப்பி உள்ளது.
சின்சியாங்-கில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் 12 நாட்களில் ஆப்கானின் லஜார் இ ஷரிப் நகரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 2,600 டன் நிவாரணப் பொருட்களை சீனா அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.