ஓங்கி அடித்த திமுத்!! -மே.இ.தீவுகளின் அறிமுக வீரருக்கு ஏற்பட்ட சோகம்-

ஆசிரியர் - Editor II
ஓங்கி அடித்த திமுத்!! -மே.இ.தீவுகளின் அறிமுக வீரருக்கு ஏற்பட்ட சோகம்-

இலங்கையின் காலியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பந்து தாக்கியதில் உபாதைக்கு உள்ளான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஜெர்மி சோலோசானோ நோயாளர்காவு வண்டியின உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த போட்டியில் 24 ஆவது ஓவருக்காக ரோஸ்டன் சேஸ் பந்து வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்து வீச்சினை திமுத் கருணாரத்ன ஓங்கி அடித்தார். அந்த பந்து பிட்ச்சுக்கு அருகில் நின்று களடுத்தடுப்பில் ஈடுபட்ட 26 வயதுடைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அறிமுக வீரரான ஜெர்மி சோலோசானோவின் தலைக் கவசத்த்தில் வேகமாக தாக்கியது.

இதனால் அவர் மைதானத்தில் சுருண்டு வீழ்ந்ததுடன், தொடர்ந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர்காவு வண்டிக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


Radio