சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!! -தமிழகத்தில் சோகம்-

ஆசிரியர் - Editor II
சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!! -தமிழகத்தில் சோகம்-

இந்தியாவின் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம்  இந்திய ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.


Radio