கனடாவில் வரலாறுகாணாத மழை!! -அவசரகால நிலை பிரகடனம்: மீட்பு பணிகளும் முழு வீச்சில்-
கனடாவின் மேற்கு திரையில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொட்டித்தீத்த கன மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான்கூவர் நகரைக் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து அங்கு மழை கொட்டத் ஆரம்பித்துள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருமழை மற்றும் மண்சரிவுகளால் அங்கு தற்போது வரை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவரை காணவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் இன்னும் கூடுதலான உயிரிழப்புகள் எற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவசரக்கால நிலையைப் பிரகடனப்படுத்திய மத்திய அரசாங்கம் அங்கு உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.