SuperTopAds

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 13 இலட்சம் பேர் முன்பதிவு!!

ஆசிரியர் - Editor II
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 13 இலட்சம் பேர் முன்பதிவு!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டு மண்டல பூஜைக்கான வழிபாடுகள் ஆரம்பின.

அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். சபரிமலையில் காலை நடை திறக்கப்பட்டதும், கேரள தேவஸ்தான துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 இலட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினம் தினம் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்