SuperTopAds

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா திரிபு வைரஸ்!!

ஆசிரியர் - Editor II
சீனாவில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா திரிபு வைரஸ்!!

சீனா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு டெல்டா திரிபு வைரஸ் பாரிய அளவில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி முதல் தற்போது வரையிலான காலப்பகுதியில் 1,308 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா தொற்று 21 மாகாணங்கள் மற்றும் மாநகர சபைகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாக இருப்பினும், சீன அரசாங்கம் தொற்றினை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவரும் முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய வரையிலான காலப்பகுதியினில், அந்நாட்டின் பிரதான நிலப்பரப்பில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 98,315 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,636 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.