இன்று இரவு உருவாகிறது புதிய தாழமுக்கம்! வடக்கு, கிழக்கில் கனமழை எச்சரிக்கை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
இன்று இரவு உருவாகிறது புதிய தாழமுக்கம்! வடக்கு, கிழக்கில் கனமழை எச்சரிக்கை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் இன்று இரவு புதிய தாழமுக்கம் ஒருவாகும். என கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். 

எதிர்வரும் 16ம் அல்லது 17ம் திகதி வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக அவ்வப்போது தொடர்ந்து மழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

குறிப்பாக முன்னரைப் போல யாழ்.மாவட்டத்திற்கும் ஏனைய பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கும் கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நாளை முதல் (14.11.2021) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது உகந்தது. என கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு