SuperTopAds

தடுப்பூசி போடுவதற்கான சிரின்ஜ்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்! -எச்சரிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போடுவதற்கான சிரின்ஜ்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்! -எச்சரிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்-

எதிர்வரும் வருடம் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கு தேவையான சுமார் 2 பில்லியன் சிரின்ஜ்களுக்கான பற்றாக்குறை ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட நிபுணர் லிசா ஹெட்மேன் தெரிவித்தார்.

இந்த பற்றாக்குறையால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாக பாதிக்கும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை செய்துள்ளார். 

பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையால் தொற்று பரவலின் ஆரம்பத்தில் காணப்பட்ட பதுக்கல் நடவடிக்கைகள் மீளவும் இடம்பெறாமல், தவிர்ப்பதற்கு சுகாதார அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளவில் 6.8 பில்லியனுக்கும் அதிக கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.