SuperTopAds

சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா!!

சிங்கப்பூர் - நைட் சபாரி இரவு நேர மிருகக்காட்சி சாலையில் உள்ள 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்குள்ளகி பாதிக்கப்பட்டுள்ளமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மூலமாக சிங்கங்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கங்கள் இருமல், தும்மல் மற்றும் சோம்பல் உள்ளிட்ட லேசான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக விலங்கு மற்றும் கால்நடை சேவை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 4 சிங்கங்களை விட ஒரு ஆப்பிரிக்க சிங்கமும் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கும் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவை உட்பட பூங்காவில் உள்ள 9 ஆசிய சிங்கங்களும் 5 ஆப்பிரிக்க சிங்கங்களும் அந்தந்த குகைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க மாண்டாய் வனவிலங்கு குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனைத்து சிங்கங்களும் கொரோனா தொற்றுத் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.