33 இலட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு!! -இந்தியாவில் மோசமான நிலவரம்-
இந்தியாவில் 33 இலட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் அந்நாட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 17 இலட்சத்து 76 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020 ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 927,000 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஓராண்டில், இந்த எண்ணிக்கை 91 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அவதானிக்கையில், அதிகளவான குழந்தைகள் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 616,000 குழந்தைகள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 178,000 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.