இமயமலை ஏறும் போது காணாமல்போன 3 பிரான்ஸ் நாட்டு மலையேறிகள்!! -சடலமாக மீட்கப்பட்ட சோகம்-

ஆசிரியர் - Editor II
இமயமலை ஏறும் போது காணாமல்போன 3 பிரான்ஸ் நாட்டு மலையேறிகள்!! -சடலமாக மீட்கப்பட்ட சோகம்-

கடந்த இரு வாரங்களுக்கு முன் இமய மலைக்கு ஏறும் முயற்சியின்போது காணாமல்போன 3 பிரான்ஸ் நாட்டு மலையேறிகள் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இறுதியாக செய்மதி தொலைப்பேசியினூடாக அவர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இதன் பின் அம் மலையின் மிங்போ ஈக்கர் பகுதியில் 19,700 அடி உயரத்தில் அவர்கள் காணாமல்போயிருந்தனர். அதன் பின்னர் அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

காலநிலை சீர்கேடு காரணமாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்கள் தமது முயற்சிகளைக் கடந்த வாரம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 3 பிரான்ஸ் நாட்டு மலையேறிகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  சடலங்கள் உலங்குவானூர்தி மூலம் காத்மண்டுவிற்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.