SuperTopAds

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படையினரிடம் ஒப்படைத்த குழந்தை மாயம்!!

ஆசிரியர் - Editor II
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படையினரிடம் ஒப்படைத்த குழந்தை மாயம்!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றிய  போது நடந்த குழப்பத்தில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மாயமாகி உள்ளது.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆகஸ்ட் 19 ஆம் திகதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.

அப்போது, ஒரு  குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இருப்பினும் தற்போது அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கபடவில்லை என்றும் பெற்றோர்கள் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மிர்சா அலி அகமதியும் அவரது மனைவி சுரயாவும் ஆப்கானில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வாயில்களுக்கு வெளியே நாட்டை விட்டு வெளியேற போராட்டிக்கொண்டு இருந்தனர். நுழைவாயிலுக்கு விரைவில் செல்வோம் என்று நினைத்து. அவர்கள் தங்கள் குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படையினரிடம் ஓப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.