SuperTopAds

நிறை போதையில் அயல் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி!! -மடக்கிப்பிடித்து நையப்பிடைத்த மக்கள்-

ஆசிரியர் - Editor II
நிறை போதையில் அயல் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி!! -மடக்கிப்பிடித்து நையப்பிடைத்த மக்கள்-

நிறை மது போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. 

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 56) 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அவர் நிறை மது போதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி (47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

அப்போது வீட்டில் பெண்களும் இந்துள்ளனர். இதனால் அவருடன் வீட்டில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து முன்னாள் எம்.பி தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர பொலிஸ் நிலையத்தில் கோபி முறைப்பாடு செய்துள்ளார்.