தந்தை - மகள் தவறான உறவில் பிறந்த சிசுவை ஆற்றில் வீசிய குரூரம்! இருவரும் கைது, தந்தை ஏற்கனவே இரு திருமணமாம்..
பிறந்து 3 நாட்களான சிசு ஆற்றில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், 19 வயதான இளம்பெண் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் அம்பாறை சொறிக்கல்முனை - சம்மாந்துறை வீதியில் உள்ள கிட்டங்கி ஆற்றில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே சிசு மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பக்கி தம்பி அஸ்பர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையின் தாயாரான 19 வயதுடைய அவரது மகள் அஸ்வர் பாத்திமா பாஸ்லூன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதால் பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான்
உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை
சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே இரு திருமணம் செய்துள்ளதுடன் அவர்களை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.