SuperTopAds

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபத்த இளைஞர்!! -தங்கநகை, பணத்துடன் தலைமறைவு-

ஆசிரியர் - Editor II
விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபத்த இளைஞர்!! -தங்கநகை, பணத்துடன் தலைமறைவு-

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து 2 முறை கருக்கலைத்த கள்ளக்காதலன், தங்கநகை, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார். 

இந்தியாவின் பெங்களூர் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்தவர் ரம்யா என்பவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த அவருக்கு, சக ஊழியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக ராஜூவும், ரம்யாவும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இதனால் ரம்யா 2 முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பும் செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த 15 நட்களுக்கு முன் ரம்யா மற்றம் ராஜூ ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜூ திடீரென எழுந்து வீட்டில் ரம்யா வைத்திருந்த தங்கநகைகள் மற்றும் 6 இலட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.