பாக். விமானத்தை விரட்டி விரட்டி சுட்டு வீழ்த்திய அபிநந்தன்!! -கப்டனனாக பதவி உயர்வு-

ஆசிரியர் - Editor II
பாக். விமானத்தை விரட்டி விரட்டி சுட்டு வீழ்த்திய அபிநந்தன்!! -கப்டனனாக பதவி உயர்வு-

பாக்கிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை உதவி கொமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, குரூப் கப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய விமானப்படையின் உதவி கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் 21 ரக போர் விமானங்களை இயக்கினார். 2019 இல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துன்க்வா பகுதியின் பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதில் பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ விமானத்தை அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அவர்கள் தரப்பிலான தாக்குதலில் அவரது விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதில் உயிர் தப்பிய அவரை அந்நாட்டு இராணுவம் கைது செய்தது.

பின், நம் தரப்பிலான அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீடு காரணமாக அபிநந்தனை பாக்., ராணுவம் விடுவித்தது. மக்களின் வரவேற்புடன் நாடு திரும்பிய அவருக்கு, சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அபிநந்தனுக்கு விமானப்படையின் குரூப் கப்டன் பதவி உயர்வு தற்போது வழங்கப்பட்டு உள்ளது.