SuperTopAds

திருமணமான மறுநாள் தோழியுடன் ஓடிய மணப்பெண்!! -சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை-

ஆசிரியர் - Editor II
திருமணமான மறுநாள் தோழியுடன் ஓடிய மணப்பெண்!! -சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை-

திருமணமான மறுநாள் நன்பியுடன் மணப் பெண் ஓட்டம் பிடித்தது தெரிந்ததும் மயங்கி விழுந்த மணமகன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 25 ஆம் திகதி திருமணம் நடந்தது. 

மறுநாள் மணத்தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது மணப் பெண் போன் செய்துவிட்டு வருவதாக கூறி, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வங்கிக்குள் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் வெளியே வந்து பார்த்தபோது இளம் பெண்ணை காணவில்லை.

இவ்விடயம் தொடர்பில் கணவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் நடத்திய விசாரணையில், பெண்ணுக்கு ஒரு தோழி இருப்பதும், 2 பேரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றதும் தெரியவந்தது. 

அவர் செல்லும் போது வங்கியில் இருந்து எடுத்த ஒரு இலட்சம் ரூபா மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார். திருமணமான மறுநாள் மனைவி தோழியுடன் ஓட்டம் பிடித்ததை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போன கணவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாயமான புதுப்பெண், அவரது தோழி ஆகியோரை பொலிஸார் வலைவீசி தேடி வந்தனர்.