ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 வருட சிறைத் தண்டனை!! -இராணுவ ஆட்சியாளர்கள் விதித்தனர்-
ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் பாராளுமன்ற அவைத்தலைவருமான வின் டேயினுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டில் மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களால் 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
80 வயதாகும் அவர் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியான்மாட இராணுவ ஆட்சியாளர்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் முதல் முக்கிய தலைவர் ஆவார்.
முன்னாள் இராணுவ வீரரான அவர் ஏற்கெனவே இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர். தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக இருந்தவருமான ஆங் சான் சூகியின் வலதுகரமாக வின் டேயின் கருதப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய மற்றும் தைராய்ட் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.