எடப்பாடி வைத்தியசாலையில் அனுமதி!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குடலிறக்க பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான தொடர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.