தலிபான் அரசுக்கு 10 இலட்சம் டொலர் நிதி உதவி!! -சீனா வழங்குவதாக அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தலிபான் அரசுக்கு 10 இலட்சம் டொலர் நிதி உதவி!! -சீனா வழங்குவதாக அறிவிப்பு-

தலிபான்கள் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலிபான் அரசின் பொறுப்பு துணை பிரதமர் முல்லா அப்துல்கானி பரதர் திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சரை வாங்யீயை சந்தித்துப் பேசியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய உதவி செய்யப்படும் என்று இருதரப்பு சந்திப்பின் போது சீனா உறுதி அளித்தது.

மேலும் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட 50 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளையும் அளிக்க சீனா உறுதி வழங்கியிருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு