வன்னியில் பெரும்பான்மைக் கட்சிகள் வெற்றிபெற இதுவே காரணம்!

ஆசிரியர் - Admin
வன்னியில் பெரும்பான்மைக் கட்சிகள் வெற்றிபெற இதுவே காரணம்!

பெரும்பான்மைக் கட்சிகள் வன்னியில் வெற்றிகொள்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அக்கறை இன்மையே காரணமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று வியாழக்கிழமை(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக வன்னிப் பகுதியில் தேசியக் கட்சிகள் அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ளன.

இதற்கான அடிப்படைக் காரணம் தமிழ்க் கட்சிகள் குறித்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் செயற்படாமையே ஆகும்.

இதனாலேயே வன்னிப் பகுதியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளைப் பழிக்குப் பழிவாங்கும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் காணப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய சில நாட்களாகப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் பிரகாரம் நாம் திட்டமிட்டு ஏனைய சக தமிழ் கட்சிகளை பழிக்குப்பழி வாங்குவதாக எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதும் கிடையாது, இனி செயற்படப் போவதும் கிடையாது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு